ஒருவன் எப்போது நேர்மையான மனிதனாக மாறுகிறான்?
கேள்வி : ஒருவன் எப்போது நேர்மையான மனிதனாக மாறுகிறான்?சி.காயத்திரி, மணிநகரம். ஞானகுரு : தன்னுடைய கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்ற உண்மை புரியும்போது நேர்மையான மனிதனாக மாறுகிறான். ஆனால் அதற்குள் காலம் கடந்திருக்கும்.
சரி, தவறு என்பதை எப்போது பகுத்தறிகிறோம்?
கேள்வி : சரி, தவறு என்பதை எப்போது பகுத்தறிகிறோம்? பி.கண்ணன், சென்னை. ஞானகுரு : தோல்வியில் தன்னுடைய தவறு என்ன என்பதையும், வெற்றியில் தன் பங்கு என்ன என்பதையும் ஒருவன் தெளிவாக அறிந்துகொண்டால் அடுத்ததும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஆனால் பலர்…
அன்புக்கு எல்லை வகுக்கலாமா?
கேள்வி : அன்புக்கு எல்லை வகுக்கலாமா? கே.சோனைக்கருப்பன், ராஜபாளையம். ஞானகுரு : ‘இது என்னுடையது’ என்று எல்லை வகுக்கும்போது எதிரி உருவாகிறான். அதனால் காற்றுபோல் பரந்துவிரியட்டும் அன்பு. பறவையை கக்கத்துக்குள் அடைக்க நினையாதே, பறக்கவிடு.
கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கு முக்கியமான காரணம் என்ன?
கேள்வி : கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கு முக்கியமான காரணம் என்ன? சரவணன், பாண்டியன் நகர். ஞானகுரு : ’குழந்தைகளை வைத்துத்தான் எங்களுக்குள் சண்டை வருகிறது, மற்றபடி அவருக்கும் எனக்கும் பிரச்னை வருவதே இல்லை’ என்று பல பெண்கள் ஒப்புதல்…
எப்படித்தான் முன்பு பிள்ளைகளை வளர்த்தார்கள்?
கேள்வி : எப்படித்தான் முன்பு பிள்ளைகளை வளர்த்தார்கள்? சங்கீதா, ஆமத்தூர். ஞானகுரு : பிள்ளையை பெற்றுப்போடுவது தாயின் வேலை, வளர்வது கடவுளின் விருப்பம் என்று நினைத்தார்கள். அதனால் குழந்தைகளை பறவையாகவும் விலங்காகவும் திரிய விட்டார்கள். பெற்றுப்போட்ட ஏழெட்டில் இரண்டு அல்லது மூன்று…
ஆண்கள் புத்திசாலிகளா, பெண்கள் புத்திசாலிகளா? விளக்கமாக சொல்லுங்கள்!
கேள்வி : ஆண்கள் புத்திசாலிகளா, பெண்கள் புத்திசாலிகளா? விளக்கமாக சொல்லுங்கள்! முருகேசபாண்டியன், சத்திரப்பட்டி. ஞானகுரு : பாரதத்தில் அற்புதமான ஒரு காட்சி. பாண்டவர்கள் சூது விளையாடி தோற்றுப்போய் கானகத்தில் வசிக்கும்போது, ஸ்ரீகிருஷ்ணர் அவர்களைக் காண வருவார். கிருஷ்ணரிடம் உரிமை எடுத்துக்கொண்டு பேசும்…
சிரித்துக்கொண்டே இருப்பதற்கு வழி கூறுங்கள்?
கேள்வி : சிரித்துக்கொண்டே இருப்பதற்கு வழி கூறுங்கள்? எம்.காவ்யா, மூணாறு. ஞானகுரு : நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய். அதனால் முதலில் சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் உன் அடி மனதில் விதையைப் போன்று புதைத்துவை. அன்பை நீராக ஊற்று. அவை…
திருமணத்திற்கு முன் காதல், திருமணத்திற்குப் பின் காதல் & இரண்டில் எது சரி?
கேள்வி : திருமணத்திற்கு முன் காதல், திருமணத்திற்குப் பின் காதல் & இரண்டில் எது சரி? ஏ.வனிதா, சிவகாசி. ஞானகுரு : காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? வாழும் வரையிலும் காதல் செய். மனிதர்களை மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள…
எதனை இழந்தால் பெறமுடியாது?
கேள்வி : எதனை இழந்தால் பெறமுடியாது? எஸ்.கந்தன், பாண்டியன்நகர். ஞானகுரு : தலைமுடியும், மானமும் ஒன்றுதான். போனாலும் திரும்பிவிடும் என்பதற்கு நம் அரசியல்வாதிகளே வாழும் சாட்சி. வீணாக செலவழித்த நேரத்தையும் உயிரையும் மட்டுமே இப்போதைக்குப் பெறமுடியாது.
மனிதனுக்கு எது தேவை?
கேள்வி : மனிதனுக்கு எது தேவை? எம்.பழனி, காமராஜ்புரம் ஞானகுரு : இதனை நேரமும் காலமும்தான் முடிவு செய்யமுடியும். ரெண்டு நாட்கள் பட்டினியாக இருப்பவனுக்கு சோறுதான் தேவை. விளையாட்டில் ஆர்வமாக இருப்பவனுக்கு வெற்றி தேவை. கடுமையான உடல் உழைப்பு கொடுத்தவனுக்கு உறக்கம்…