Tag: மந்திரச்சொல்

வாழ்வில் வெற்றிகொள்ளத் தேவை அறிவா, ஆற்றலா?

வாழ்வில் வெற்றிகொள்ளத் தேவை அறிவா, ஆற்றலா? ஏ.குட்டி, அழகர்சாமிபுரம் ஞானகுரு : அறிவுக்கும் வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை. ஆற்றலுக்கும் வெற்றிக்கும் தொடர்பு இல்லை. வாழ்வின் வெற்றிக்குத் தேவை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை. பொறுமையோடு காத்திருக்கும் வலிமை. நேரம் வரும்போது பாயும் திறமை. இவற்றும்…

கொட்டிய வார்த்தைகளையும் பேசிய சொற்களையும் திரும்பப் பெறுவது எப்படி?

கொட்டிய வார்த்தைகளையும் பேசிய சொற்களையும் திரும்பப் பெறுவது எப்படி? பி.சிதம்பரம், ஆமத்தூர். ஞானகுரு : சாபங்களைத் திரும்பிப்பெற முனிவர்களாலும் முடியாது. ஆனால் விமோசனம் பெறுவதற்கான வழியைச் சொல்வார்கள். நீயும் முறையான பரிகாரம் செய்வதன் மூலம் கொட்டிய சொற்களை அள்ளவும் செய்த செயல்களை…

நாட்டையும் வீட்டையும் ஆள்வது ஆணாதிக்கமா, பெண்ணாதிக்கமா?

நாட்டையும் வீட்டையும் ஆள்வது ஆணாதிக்கமா, பெண்ணாதிக்கமா?வி.லிங்கதுரை சாத்தூர். ஞானகுரு : இந்த உலகம் முழுவதையும் வெற்றிகொள்ள ஆண் தீவிரமாக உழைக்கிறான். அந்த ஆணை வெற்றிகொள்ள பெண் உழைக்கிறாள். அப்படியாயின் நிறைந்திருப்பது ஆணாதிக்கமா, பெண்ணாதிக்கமா என்பதை நீயே முடிவு செய்துகொள்.

என்ன தொழில் செய்தாலும் எனக்கு மட்டும் பின்னடைவுதான் கிடைக்கிறது. நான் என்னதான் செய்வது?

என்ன தொழில் செய்தாலும் எனக்கு மட்டும் பின்னடைவுதான் கிடைக்கிறது. நான் என்னதான் செய்வது? ஏ.ஆர்.கார்த்தி, ஏலகிரி. ஞானகுரு : புலி வேட்டையாடுவதை தொலைக்காட்சியில் கவனித்திருக்கிறாயா? நூறு மான்கள் திரிந்தாலும் ஏதாவது ஒரு மானை மட்டுமே குறிவைக்கும். அந்த மான் எத்தனை தூரம்…

கீதை, குரான், பைபிள் மக்களுக்கு கூறும் கருத்து யாது?

கீதை, குரான், பைபிள் மக்களுக்கு கூறும் கருத்து யாது?எஸ்.சமுத்திரக்கனி, கிழக்கு என்.ஜி.ஓ. காலனி. ஞானகுரு : கடவுளால் சொல்லப்பட்டவையாக கருதப்பட்டாலும் இந்தப் புனித நூல்கள் எல்லாமே மனிதர்களால் எழுதப்பட்டவையே. சாலைப் பயணத்தின் பாதுகாப்புக்கென சில விதிகள் இருப்பதுபோல், இந்த நூல்கள் மனிதனின்…

பெண்ணுக்கு அழகு புன்னகையா, பொன்னகையா?

பெண்ணுக்கு அழகு புன்னகையா, பொன்னகையா? எம்.விண்ணரசி, பரமக்குடி ஞானகுரு : தனக்கு எது அழகு என்பதை அந்தப் பெண்தான் தீர்மானிக்க வேண்டும். எவராலும் எப்போதும் திருடமுடியாத ஒன்றுதான் அவளுக்கு அழகு சேர்ப்பதாக இருக்கமுடியும். பொன் என்பது சாதாரண உலோகம். மிகவும் குறைவாகவும்…

மனதிற்கு ஆறுதல் தருவது பாடலா, இசையா?

மனதிற்கு ஆறுதல் தருவது பாடலா, இசையா? பி.சகுந்தலாதேவி, தேனி ஞானகுரு : பாடலைவிட இசையே மனதிற்கு உகந்தது, உயர்ந்தது. வண்டுகளின் ரீங்காரம், தென்னையோலைகளின் சலசலப்பு, குயிலின் குரல், அருவியின் பேரிரைச்சல், கடலின் ஆர்ப்பரிப்பு போன்றவைகளை ரசிப்பதற்கு மொழி தேவையில்லை. நன்கு கட்டமைக்கப்பட்ட…

மனித மனதை அப்பட்டமாகத் தெரிவிப்பது கடிதமா, அலைபேசியா?

மனித மனதை அப்பட்டமாகத் தெரிவிப்பது கடிதமா, அலைபேசியா?வி.மகாலிங்கம், சூரக்கோட்டை ஞானகுரு : கண்ணாடியில் தெரியும் பிம்பமும், வெயிலில் தெரியும் நிழலும் நிஜம் அல்ல. கண்களில் மட்டுமே உண்மையைத் தரிசிக்க முடியும். கடிதமும் அலைபேசியும் உன் மனதை வடிகட்டியே அனுப்புகின்றன.

மனைவியை தெய்வமாகப் போற்ற வேண்டுமா?

மனைவியை தெய்வமாகப் போற்ற வேண்டுமா? பி.கமலக்கண்ணன், முத்துராமபுரம். ஞானகுரு : குடும்பம் என்பதை ஒரு கோயில் என்றால் மனைவியும் ஒரு தெய்வம். அவளை போற்றினால் வரம் கிடைக்கும், திட்டினால் என்ன கிடைக்கும் என்பது உனக்குத்தான் தெரியுமே….

தாய்க்கு இணையாக ஆசிரியரை சொல்லலாமா?

தாய்க்கு இணையாக ஆசிரியரை சொல்லலாமா? பி.பஷீர்முகமது, அகமது நகர். ஞானகுரு : சூரிய ஒளிக்கு இணையாக மெழுகுவத்தி ஒளியைச் சொல்லமுடியுமா? ரத்தமும் உயிரும் கொடுப்பவள் தாய். தங்கள் வருமானத்துக்காக பிறருக்கு வழி காட்டும் தொழில் செய்பவரே ஆசிரியர். வாழ்க்கையில் வழிப்போக்கராக வந்துபோகும்…