Tag: பணம்

பணம் துன்பம் தரக்கூடியதா..?

‘’சாமி, எனக்கு பணம் சம்பாதிக்கப் பிடித்திருக்கிறது. பணத்தை சேமித்து வைக்க பிடித்திருக்கிறது. பணத்தை பார்ப்பதுதான் எனக்கு சந்தோஷம். ஆனால், பணம் துன்பம் தரக்கூடியது என்று சொல்கிறார்களே… அது ஏன்?” நியாயமான சந்தேகம் கேட்டார் மகேந்திரன். ‘’சிலருக்கு தபால் தலை சேகரிக்கப் பிடிக்கும்.…

பணத்தை விதையாக்கு..!

மனைவியுடன் வந்து ஞானகுருவை சந்தித்தார் மகேந்திரன். ‘’நாங்கள் இருவரும் வேலை செய்கிறோம். செலவுகளைத் தாண்டியும் பணம் கையில் இருக்கிறது. இவற்றை என்ன செய்வது..?” ஆர்வமுடன் கேட்டார் மகேந்திரன். ‘’பணத்தை விதையாக்கு’’ என்றார் ஞானகுரு. புரியவில்லை என்று மகேந்திரன் விழிக்கவே, பேசத் தொடங்கினார்.…

பணத்தைவிட குடும்ப விழா முக்கியமா?

ராதையும் ராமனுடன் தங்கள் குழந்தையுடன் கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு, வசந்த மண்டபத்தில் அமர்ந்தனர். ‘’அடுத்த வாரம் குழந்தைக்கு பர்த் டே வருது, எப்படியாவது வேலையைக் குறைச்சுட்டு வரப் பாருங்க..’’ என்று ராதை அடிக்குரலில் அழுத்தமாகப் பேசினாள். ‘’எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு…

பணம் எப்படி குட்டி போடும்..?

மரத்தடியில் காய்ந்த சருகுகளுடன் விளையாடிக்கொண்டிருந்த ஞானகுருவை சந்தித்தான் ராமச்சந்திரன். தனிமையில் சந்திக்கவேண்டும் என்று வந்திருப்பது தெரிந்தது. பக்கத்தில் வந்து நின்றவன், ‘சாமி… எனக்கு வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை வீட்டுக்குக் கொண்டுவந்ததும் எங்கே வைக்க வேண்டும் என்பது குழப்பமாக இருக்கிறது. பணப்பெட்டியில் வைக்கவேண்டும்…

பணம் என்றொரு மாயப் பிசாசு

முத்துக்கண்ணுவின் ஜாகை குறைந்தபட்சம் நைந்த கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும் என நினைத்தேன். என் நினைப்பைப் பொய்யாக்கும்வண்ணம் பிளாஸ்டிக் உரச்சாக்குகளால் பந்தல் போல் கட்டப்பட்டிருந்தது. கீற்றுக் கொட்டகை, அஸ்பெஸ்டாஸ், பிளாஸ்டிக் படுதா என்று விதவிதமாக நூற்றுக்கணக்கில் குடிசைகள் அக்கம்பக்கம் நிரம்பிவழிந்தன. ஒரு புறம் சாக்கடை…

இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ முடியுமா?

பஸ் வருவதாகத் தெரியவில்லை. ஆட்டோவில் போய்விடலாம் என்று மனைவி கேட்க, சுள்ளென்று எரிந்துவிழுந்தான் கணவன். ‘’இங்கே என்ன கொட்டியா கிடக்குது, அரைமணி நேரம் பஸ்ஸுக்கு நின்னா ஒண்ணும் ஆயிடாது…’’ என்று கொஞ்சம் உரக்கவே சத்தம் போட்டான். கூட்டத்தினர் திரும்பிப் பார்ப்பது தெரிந்ததும்…

பணம் வாழ்க்கைக்கு அத்தனை அவசியமா..?

மரத்தடியில் சாய்ந்திருந்த ஞானகுருவின் அருகே ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். தூரத்தில் ரோடு போடும் தொழிலாளிகளை பார்த்த பிச்சைக்காரன், ’என்னாத்துக்கு இப்படி கஷ்டப்பட்டு உழைக்கிறாங்க, வாழ்க்கைக்கு பணம் அத்தனை தேவையா?’ என்று கேட்டான். ‘’உனக்கு பணத்திற்குப் பதிலாக நான்கு கருங்கல் போட்டால் ஏற்றுக்கொள்வாயா..?’’…

பணம் சம்பாதிப்பது இத்தனை எளிதுதானா..?

கோயில் சுற்றுசுவரில் சாய்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஞானகுருவின் அருகே ஒரு வாழைப்பழமும், வெற்றிலையும் வைத்த குடும்பத் தலைவன் ஒருவன், ‘’பணம் சம்பாதிக்க ரொம்பவும் கஷ்டமா இருக்குது சாமி, ஏதாவது நல்ல வழி காட்டுங்களேன்…’’ என்றான். ‘’உடலும் மனமும் உறுதியுடன் இருந்தால் எளிதாக…

எதிர்காலத்துக்காக எவ்வளவு சேமிக்க வேண்டும்?

ஒவ்வொரு நாள் கண் விழிக்கும்போதும், சந்தோஷத்திற்கு பதிலாக அச்சம் கொள்ளும் மனிதர்கள்தான் அதிகம். அதற்கு முக்கிய காரணம் இன்று என்ன செய்யப்போகிறோம் என்பதல்ல, நாளை என்ன நடக்கும் என்பதுதான். ’நேற்றைய தினத்தில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள், இன்றைய தினத்தில் வாழுங்கள், நாளைய தினத்தில்…

பணம்தான் மனிதகுலத்தின் அத்தனை தீமைகளுக்கும் காரணமா..?

செல்வத்தைக் கண்டதும் ஒரு சாமியார், ‘அச்சோ… பேய்… பேய்’ என்று பயந்து ஓடினார் என்ற கதை வெகுபிரபலம். உண்மையில் பணம் அத்தனை கொடூரமானதா..? பணத்துக்காக என்னவெல்லாம் நடக்கிறது என்று பார்க்கலாம். தான் பெற்ற பிள்ளையை பணத்துக்காக விற்கிறாள் ஒரு தாய். சிறிய…