Tag: ஆனந்த வாழ்வு

வயசில் என்னதான் இருக்கிறது..?

’’சின்னப் பிள்ளையாக இருந்த நேரத்தில், எப்போது பெரியவனாவேன் என்று ரொம்பவும் ஆசைப்பட்டேன். 50 வயதைத் தொட்டவுடன், நான் சின்னப் பிள்ளையாகவே இருந்திருக்கக் கூடாதா என்று ஆசைப்படுகிறேன். ஏன் இப்படி என் மனது மாறிவிட்டது…’’ என்று கேட்டார் மகேந்திரன். புன்னகையுடன் பேசத்தொடங்கினார் ஞானகுரு.…

குற்றவுணர்வுக்கு தண்டனை என்ன தெரியுமா?

முகத்தில் சோகம், மனதில் பாரத்துடன் இளைஞன் ஒருவனை அழைத்துவந்தார் மகேந்திரன். வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றவன் இப்போதுதான் திரும்பியிருக்கிறான். உங்களிடம் பேச விரும்புகிறான் என்று அறிமுகப்படுத்தி விலகினார் மகேந்திரன்.பக்கத்தில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினான் அந்த இளைஞன். ‘‘எனக்கு…

முதுமைக்கு எவ்வளவு பணம் தேவை..?

தலை நரைத்துப்போன முதியவரிடம் பேசிக்கொண்டு இருந்தார் ஞானகுரு. ‘வெள்ளை நரை என்பது, காலம் உங்கள் தலையில் அணிவிக்கும் மணி மகுடம். நிறைய பேர் இந்த மகுடம் கிடைக்காமலே இந்த பூமியில் இருந்து விடைபெற்று போய்விடுகிறார்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலி’ என்று சொன்ன பிறகும்,…

கொஞ்சநேரம் சும்மா இருக்கமுடியுமா..?!

‘’உங்களைப் போன்ற சாமியார்கள்தான் கொடுத்துவைத்தவர்கள். செய்து முடிக்க வேண்டிய வேலை என்று எதுவும் கிடையாது. யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது. சும்மா இருந்தாலே போதும், சுகமான வாழ்க்கை’’ என்று ஞானகுருவிடம் கூறினார் மகேந்திரன். ‘’உண்மைதான் மகேந்திரா… இந்த வாழ்க்கையில் இத்தனை…

அவசரங்களில் இருந்து விடுதலைக்கு அரை மணி நேரம்.!

‘’உன்னைத் தொட்டுச்செல்லும் தென்றலை, உன் வீட்டு வாசலில் பூத்துநிற்கும் கொன்றை மரத்தை ரசிக்கவும் முடியாத அளவுக்குப் பரபரப்பாக இயங்குவதைத்தான் வாழ்க்கை என்று நம்பிக்கொண்டு இருக்கிறாயா?… அந்த பரபரப்பில் இல்லை வாழ்க்கை. அவற்றை ரசிப்பதற்கு நீ தினமும் ஒதுக்கவேண்டிய அரை மணி நேரத்தில்தான்…

குழந்தைக்கு முன் பொய் பேசலாமா..?

’ஒரு பொய் பேசினால் அது ஓராயிரம் பொய்யாக மாறிவிடும். பொய்யை மறைக்க மேலும் மேலும் பொய்கள் பேசத்தான் வேண்டியிருக்கும். அதனால், எத்தனை கசப்பாக இருந்தாலும் உண்மையைப் பேசிப்பாரேன்’ என்று ஒரு வியாபாரியிடம் பேசிவிட்டு திரும்பினார் ஞானகுரு. ‘’உண்மை பேசுவதால் நமக்கு என்ன…

மன அழுத்தத்தை நல்ல கருவியாக்கு…!

’’விபத்தில் சிக்கி ஒரு கை நொறுங்கிப் போயிருந்தாலும், வலியை தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கும் நபர்கள் உண்டு, ஒரு சின்ன முள் குத்தினாலே கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்களும் உண்டு. எது நடந்தாலும், அதனை எளிதாக எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை……

பெற்றோரிடம் அழகை எதிர்பார்க்கிறாயா.?

’அழகான மலரைப் பார்க்கும் எவரும், அதனை பறிப்பதற்கு ஆசைப்படவே செய்வார்கள். அதனுடைய அர்த்தம் என்ன தெரியுமா? அந்த அழகை தனக்கே தனக்கு என்று சொந்தமாக்கிக்கொள்ளும் சுயநலம்தான்’ என்றார் ஞானகுரு. ‘’அப்படியென்றால் நான் அழகாக இருப்பது என் தவறா..?’’ கேள்வி கேட்டாள் கல்லூரி…

அழகு என்பது வரமா..?

‘’எந்த பட்டாம்பூச்சியும் அதன் வண்ணத்திற்காக பெருமைப்படுவதில்லை. அழகைக் காட்டி பரிசும் பாராட்டும் கேட்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்த வண்ணத்துப் பூச்சிகளுக்கு, அதனிடம் உள்ள அழகான வண்ணம்கூட தெரிவதே இல்லை’’ என்று கல்லூரிப் பெண்ணுக்கு பாடம் நடத்தினார் ஞானகுரு. ‘’அப்படியென்றால் அழகை கொண்டாடக்கூடாதா?’’…

கடன் என்பது எதிர்கால நம்பிக்கை..!

’காத்திருக்க கற்றுக்கொள். நீ வேட்டையாடுவதில் புலியாக இருந்தாலும் பதுங்கியிருந்து, காத்திருந்து சரியான நேரத்தில் பாய்ந்தால்தான் மானை பிடிக்க முடியும். உன்னிடம் இருக்கும் திறமையும் முயற்சியும் மட்டுமே வெற்றியைக் கொடுக்காது. காத்திருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதை கற்றுக்கொள். உனக்கான நேரம் நாளையும்…