Category: மெய்ப்பொருள்

எங்க வீட்ல இருக்கு… உங்க வீட்ல இருக்கா?

பக்கத்து வீட்ல வாங்கிட்டாங்க, எதிர் வீட்ல வாங்கிட்டாங்க, உங்க வீட்ல வாங்கியாச்சா என்று உருப்படாத பொருளை எல்லாம் விளம்பரங்களில் பார்த்து வீட்டிற்கு வாங்கிப்போடும் நம் மக்களிடம்தான், இன்னமும் கழிவறை வசதி குறித்த விழிப்புணர்வு வளரவே இல்லை. இது நம் நாட்டின் சாபக்கேடு…

சமையலறையில் இருந்து விடுதலை

எழுத்தாளர் அம்பையின் பெண் கதாபாத்திரங்கள் மனசுக்கு வலிக்கும் வகையில் உண்மை பேசுபவை. சமையல் கட்டில் முடங்கிக்கிடக்கும் பெண் கதாபாத்திரம் பேசுவதாக ஒரு காட்சி வரும்.  ‘’பத்து வயசு தொடங்கி தோசை சுடறேன். நாப்பது வருஷத்துல ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு…

திருட்டு ஆண்… குருட்டுப் பெண்

கையில் இருக்கும்வரை ஒரு பொருளின் மதிப்பு எவருக்கும் தெரிவதில்லை. அது காணாமல் போனபிறகுதான், ‘அரிய பொருளைத் தொலைத்துவிட்டேனே’ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவார்கள். இது மனிதகுலத்துக்கே உரித்தான சாபம் என்றாலும், இந்தச் சிக்கலில் அதிகம் சிக்கிக்கொள்வது பெண்கள்தான். அவளால் தொலைக்கப்படுவது பொருள்…

பெண்ணுக்கும் மரியாதை தேவைதானா..?!

தோளுக்கு வளர்ந்த பிள்ளையை தோழன் என்பார்கள். ஆனால் செளந்தராஜன், அவருடைய தோளைத்தாண்டி வளர்ந்த பிள்ளையை அடித்து துவைத்துக்கொண்டு இருந்தார். அவரை தடுத்துநிறுத்தி காரணம் கேட்டபோது, வந்த பதில் அதிர்ச்சியாக இருந்தது. அவரது பையன் +1 வகுப்பில் மிகவும் நன்றாகப் படிக்கிறான். அடுத்தவருட…

அந்த ’மூன்று’ வருடங்கள்

ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட விளைச்சல் காலம் உண்டு. உதாரணமாக பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் மூன்று மாத காலம் முழுமையாக விளைந்தபிறகே பலன் கொடுக்கும். இந்தக் காலகட்டத்தில் களை எடுப்பது, ஊட்டச்சத்து கொடுப்பது, நீர் மேலாண்மை, பூச்சிக்கொல்லி, காவல் போன்ற…

பணத்தில் இருக்கிறதா அழகு?

எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்ற கேள்விக்கு பெண்ணிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. படிப்பு, வேலை, உயரம், குணம், உடன்பிறந்தோர், சொத்து என்று ஏராளமான அம்சங்கள் தேடப்படுகிறது. ஆனால் எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்று ஆணிடம் கேட்டால், ‘அழகா இருந்தா போதும்’ என்று…

புலி வாழும் காட்டில்தான் மான்கள் வாழ்கின்றன

தன்னுடைய முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன், பத்தாவது மாடியில் படுத்திருந்த வேதாளத்தைப் பிடித்து தோளில் தூக்கிக்கொண்டு கீழே இறங்கினான். லிஃப்ட் இன்னமும் சரிசெய்யப்படவில்லை என்பதால் வேதாளத்துடன் படிக்கட்டில் இறங்கினான். தோளில் இருந்த வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு அலுப்பு தெரியாமல் இருக்க ஒரு கதை…

ஆண் பிள்ளை என்றால் உசத்தியா?

திரைப்படம் பார்த்துவிட்டு இரவு 10 மணி சமயத்தில் வீட்டுக்கு வருகிறீர்கள். ரோட்டில் ஓர் ஆண் தனியே நிற்கிறான். அவனைப்பற்றி என்ன நினைப்பீர்கள்? அவனும் சினிமா பார்த்துவிட்டு வந்திருக்கவேண்டும், பஸ் அல்லது நண்பனுக்காக காத்திருக்கலாம் என்று எண்ணியபடி அந்த இடத்தைக் கடந்து செல்வீர்கள்.…

லிவிங் டுகெதர் வாழ்க்கையில் யாருக்கு லாபம்?

ஒரு புரட்சிப்பெண் எப்படி இருப்பாள் என்று யாராவது பார்க்கவிரும்பினால், வினோதாவை தைரியமாக சுட்டிக் காட்டலாம். கல்லூரி காலத்தில் பையன்களுடன் சகஜமாகப் பழகுவாள். தினமும் ஒரு பையன் வண்டியில் கல்லூரிக்கு வருவாள். அவளை கூட்டிச்செல்வதற்கு பையன்கள் போட்டி போடுவார்கள். ‘எனக்கு இந்தக் காலேஜ்ல…

சிவப்பு என்பது கறையல்ல…

’நீங்கள் வாங்கும் நாப்கின் கவரில் என்னென்ன குறிப்புகள் எழுதியிருக்கும் தெரியுமா என்று மாணவிகள், குடும்பத்தலைவிகள், வேலைக்குச்செல்லும் பெண்களிடம் கேட்டபோது கிடைத்த பெரும்பான்மை பதில் என்ன தெரியுமா? ‘’ச்சீய்… அதைப்போய் யார் படிப்பா. யாருக்கும்தெரியாம ரகசியமா, அவசரமா அதை பயன்படுத்துகிறோம்’’ என்கிறார்கள். உண்மைதான்.…