Author: Gyanaguru

முந்தையகால தாய்க்கும் இன்றைய தாய்க்கும் உள்ள வேறுபாடு என்ன?

கேள்வி : முந்தையகால தாய்க்கும் இன்றைய தாய்க்கும் உள்ள வேறுபாடு என்ன? டி.பிரபு, ஸ்ரீவில்லிபுத்தூர். ஞானகுரு : முந்தைய காலங்களில் தாய் வழிசமூகம் என்பதால் அதிக எண்ணிக்கையில் குழந்தை பெற்ற பெண்ணை கொண்டாடினார்கள். இளமையும், வீரமும் நிரம்பிய பெண் தலைவியாக இருந்தாள்.…

சிக்கனம் கடைப்பிடிக்காதவர்களைப் பற்றி..?

கேள்வி : சிக்கனம் கடைப்பிடிக்காதவர்களைப் பற்றி..? எம்.சிங்காரம், சாத்தூர். ஞானகுரு : பணத்தில் மட்டுமே சிக்கனத்தைக் கடைப்பிடிக்க நினைப்பது தவறு. சாப்பிடமுடியாமல் மிச்ச உணவை குப்பையில் போடுவதுதான் மிகப்பெரிய ஆடம்பர சீர்கேடு. உணவில் தொடங்கும் சிக்கனம் ஆடை, பாத்திரம், வீடு, பண்டிகை…

அனைவரும் ஒருவகையில் மனநோயாளிதானே?

கேள்வி : அனைவரும் ஒருவகையில் மனநோயாளிதானே?எஸ்.மலர்க்கொடி, கருடபுரம். ஞானகுரு : உன்னைச்சுற்றி இருக்கும் அனைவரையும் மனநோயாளியாக பார்க்க ஆசைப்படுகிறாய் என்றால், அப்படியே பார்த்துக்கொள். ஆனால் எல்லோரும் எல்லா நேரமும் மனநோயாளியாக இருப்பதில்லை. அரிய சாதனைகள் புரியும் மனிதர்களைக்கூட இந்த உலகம் மனநோயாளியாக…

எங்க வீட்ல இருக்கு… உங்க வீட்ல இருக்கா?

பக்கத்து வீட்ல வாங்கிட்டாங்க, எதிர் வீட்ல வாங்கிட்டாங்க, உங்க வீட்ல வாங்கியாச்சா என்று உருப்படாத பொருளை எல்லாம் விளம்பரங்களில் பார்த்து வீட்டிற்கு வாங்கிப்போடும் நம் மக்களிடம்தான், இன்னமும் கழிவறை வசதி குறித்த விழிப்புணர்வு வளரவே இல்லை. இது நம் நாட்டின் சாபக்கேடு…

சமையலறையில் இருந்து விடுதலை

எழுத்தாளர் அம்பையின் பெண் கதாபாத்திரங்கள் மனசுக்கு வலிக்கும் வகையில் உண்மை பேசுபவை. சமையல் கட்டில் முடங்கிக்கிடக்கும் பெண் கதாபாத்திரம் பேசுவதாக ஒரு காட்சி வரும்.  ‘’பத்து வயசு தொடங்கி தோசை சுடறேன். நாப்பது வருஷத்துல ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு…

திருட்டு ஆண்… குருட்டுப் பெண்

கையில் இருக்கும்வரை ஒரு பொருளின் மதிப்பு எவருக்கும் தெரிவதில்லை. அது காணாமல் போனபிறகுதான், ‘அரிய பொருளைத் தொலைத்துவிட்டேனே’ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவார்கள். இது மனிதகுலத்துக்கே உரித்தான சாபம் என்றாலும், இந்தச் சிக்கலில் அதிகம் சிக்கிக்கொள்வது பெண்கள்தான். அவளால் தொலைக்கப்படுவது பொருள்…

பெண்ணுக்கும் மரியாதை தேவைதானா..?!

தோளுக்கு வளர்ந்த பிள்ளையை தோழன் என்பார்கள். ஆனால் செளந்தராஜன், அவருடைய தோளைத்தாண்டி வளர்ந்த பிள்ளையை அடித்து துவைத்துக்கொண்டு இருந்தார். அவரை தடுத்துநிறுத்தி காரணம் கேட்டபோது, வந்த பதில் அதிர்ச்சியாக இருந்தது. அவரது பையன் +1 வகுப்பில் மிகவும் நன்றாகப் படிக்கிறான். அடுத்தவருட…

ஆயிரம் காதலே வா

கணவரை காதலிக்க வேண்டும் என்று நான் ஜெயலஷ்மியிடம் சொன்னதும், அவள் பளீரென சிரித்தே விட்டாள். அந்த சிரிப்புக்குப் பின்னே பெரும் வேதனை ஒளிந்திருந்தது. சிரித்து முடித்த பின்பு இதழோரத்தில் இகழ்ச்சி வந்தது. ‘’சஞ்சயனுக்கு ஏற்கெனவே மனைவியும் ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க. ராசிக்காக…

காலம் என்பது கற்பனைக் கணக்கு

பிரபல நடிகனின் ரகசிய மனைவியாக வாழும் ஜெயலஷ்மி எப்படிப்பட்ட விடிவுக்கு ஆசைப்படுகிறாள் என சிந்தித்த நேரத்தில், புயல் போன்று நுழைந்தான் சஞ்சயன். ‘’நீ நம்பூதிரி அனுப்புன ஆள் இல்லைன்னு சொல்லிட்டார். யார் நீ…?’’ என்று ஆவேசமாகக் கேட்டான். அவன் பின்னே ஓடிவந்த…