- கேள்வி : சிரித்துக்கொண்டே இருப்பதற்கு வழி கூறுங்கள்? எம்.காவ்யா, மூணாறு.
ஞானகுரு :
நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய். அதனால் முதலில் சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் உன் அடி மனதில் விதையைப் போன்று புதைத்துவை. அன்பை நீராக ஊற்று. அவை பூக்களாக மலரும்போது, நிச்சயம் உன் முகத்தில் சிரிப்பு மலரும். மனதில் எந்த வஞ்சமும் இல்லாத காரணத்தாலே குழந்தைகள் எப்போதும் சிரிக்கின்றன. நீயும் குழந்தையைப் போன்றே மாறிவிடு. மனதில் இருக்கும் வன்மம், குரோதம், பொறாமையை நீக்கிவிட்டால் சிரித்துக்கொண்டே வாழலாம்.