- கேள்வி : கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கு முக்கியமான காரணம் என்ன? சரவணன், பாண்டியன் நகர்.
ஞானகுரு :
’குழந்தைகளை வைத்துத்தான் எங்களுக்குள் சண்டை வருகிறது, மற்றபடி அவருக்கும் எனக்கும் பிரச்னை வருவதே இல்லை’ என்று பல பெண்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதைக் கேட்டிருப்பீர்கள். இதில் மறைந்திருக்கும் உண்மை என்ன தெரியுமா? குழந்தையின் முன்னிலையில் யார் பெரியவர் என்பதை காட்டிக்கொள்ள இருவரும் செய்யும் முயற்சியே சண்டையாக முடிகிறது. இருவரில் யாரும் பெரியவர் இல்லை, யாரும் சிறியவர் அல்ல என்ற உண்மையை தம்பதியர் புரிந்துகொள்வதுதான் உண்மையான வெற்றி.