- கேள்வி : எப்படித்தான் முன்பு பிள்ளைகளை வளர்த்தார்கள்? சங்கீதா, ஆமத்தூர்.
ஞானகுரு :
பிள்ளையை பெற்றுப்போடுவது தாயின் வேலை, வளர்வது கடவுளின் விருப்பம் என்று நினைத்தார்கள். அதனால் குழந்தைகளை பறவையாகவும் விலங்காகவும் திரிய விட்டார்கள். பெற்றுப்போட்ட ஏழெட்டில் இரண்டு அல்லது மூன்று நிலைத்து நின்றாலே பெரிது. ஆனால் இன்று ஒரே ஒரு பிள்ளை பெற்று, அதனை பெட்டிக்குள் வைத்து பொம்மை போல் பூட்டிவைக்கிறார்கள். எதிர்காலம் முழுவதும் இயந்திரத்தனமான பொம்மைகளே நிரம்பியிருக்கப் போகிறது.