1. கேள்வி : முந்தையகால தாய்க்கும் இன்றைய தாய்க்கும் உள்ள வேறுபாடு என்ன? டி.பிரபு, ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஞானகுரு :

முந்தைய காலங்களில் தாய் வழிசமூகம் என்பதால் அதிக எண்ணிக்கையில் குழந்தை பெற்ற பெண்ணை கொண்டாடினார்கள். இளமையும், வீரமும் நிரம்பிய பெண் தலைவியாக இருந்தாள். அவள் வேட்டையாடினாள், குழந்தைகளைப் பராமரித்தாள், ஆண்களை அடிமைகளாக வைத்திருந்தாள்.

பெண் கர்ப்பம் குறித்த மாயை விலகிய காலத்தில் பெண் மதிப்பிழந்துபோனாள். ஆண் சமூகத்தின் அடிமையாக மாறிப்போனாள்.

இப்போது மீண்டும் தனது சக்திகளை புதுப்பித்துக்கொண்டு வேகவேகமாக முன்னேறுகிறாள் பெண். சகல துறைகளிலும் ஆணை விஞ்சி சாதனைகள் படைக்கிறாள். குழந்தை பெறுவதும், பராமரிப்பதும் அவள் கைகளில்தான் இருக்கிறது. தாய்மை என்பது இப்போதும் அவளுக்கு விலங்காகவே இருக்கிறது. அதனால் இனி அவளால் ஆணை அடிமைகொள்ள முடியாது, அதேநேரம் ஆணுக்கு அடிமையாகவும் மாட்டாள். அன்றைய தாயைவிட, இன்றைய பெண்ணே நேர்த்தியானவள், நேசிக்கத்தூண்டுபவள்.

Leave a Reply

Your email address will not be published.