- கேள்வி : மனிதனுக்கு எது தேவை? எம்.பழனி, காமராஜ்புரம்
ஞானகுரு :
இதனை நேரமும் காலமும்தான் முடிவு செய்யமுடியும். ரெண்டு நாட்கள் பட்டினியாக இருப்பவனுக்கு சோறுதான் தேவை. விளையாட்டில் ஆர்வமாக இருப்பவனுக்கு வெற்றி தேவை. கடுமையான உடல் உழைப்பு கொடுத்தவனுக்கு உறக்கம் தேவை. அடிப்படைத் தேவைகள் நீங்கிய மனிதனுக்குத் தேவை சிந்தனை. ஏன் என்ற கேள்வியைக் கேட்கத் தொடங்கினால் அவன் தேவைகள் நிச்சயம் நிறைவடைந்துவிடும்.