- கேள்வி : சிக்கனம் கடைப்பிடிக்காதவர்களைப் பற்றி..? எம்.சிங்காரம், சாத்தூர்.
ஞானகுரு :
பணத்தில் மட்டுமே சிக்கனத்தைக் கடைப்பிடிக்க நினைப்பது தவறு. சாப்பிடமுடியாமல் மிச்ச உணவை குப்பையில் போடுவதுதான் மிகப்பெரிய ஆடம்பர சீர்கேடு. உணவில் தொடங்கும் சிக்கனம் ஆடை, பாத்திரம், வீடு, பண்டிகை வரையிலும் தொடரவேண்டும். ஆனால் கஞ்சத்திற்கும் சிக்கனத்திற்குமான வித்தியாசம் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் நாளையே உனது இறுதி நாளாகவும் இருக்கலாம்.