- கேள்வி : அனைவரும் ஒருவகையில் மனநோயாளிதானே?எஸ்.மலர்க்கொடி, கருடபுரம்.
ஞானகுரு :
உன்னைச்சுற்றி இருக்கும் அனைவரையும் மனநோயாளியாக பார்க்க ஆசைப்படுகிறாய் என்றால், அப்படியே பார்த்துக்கொள். ஆனால் எல்லோரும் எல்லா நேரமும் மனநோயாளியாக இருப்பதில்லை. அரிய சாதனைகள் புரியும் மனிதர்களைக்கூட இந்த உலகம் மனநோயாளியாக பார்ப்பதுண்டு. ஆனால் உண்மையான மனநோயாளி யாரென்றால், ‘நான்தான் கடவுள். என்னிடம் வாருங்கள், உங்கள் பிரச்னைகளைத் தீர்க்கிறேன்’ என்று சகல மதங்களில் இருந்தும் அழைப்புவிடும் போலி வழிகாட்டிகள்தான்.