1. வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் குரு யார்? வி.பாண்டியராஜ், சூலக்கரை

ஞானகுரு :

எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனுக்கு குருவாக இருப்பதற்கு தகுதி அற்றவன். ஆனால் எவரிடம் இருந்தும் நல்ல விஷயங்களை மனிதன் எடுத்துக்கொள்ளலாம். வேதங்களில் திரியும் மகாஞானி தத்தாத்ரேயருக்கு மொத்தம் 24 குருமார்கள்.

‘பொறுமையை பூமியிடம் கற்றேன். தூய்மைக்கு விளக்கத்தை தண்ணீரிடம் கண்டேன். பட்டும் படாமலும் வாழும் கலையை காற்றிடம் கற்றேன். தன்னை வருத்தினாலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை நெருப்பிடம் அறிந்தேன். எல்லைகள் கடந்து வாழும் தன்மையை ஆகாயத்திடம் கற்றேன்’ என்று சொல்லும் தத்தாத்ரேயர் நிலா, புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனி, குளவி, சிலந்தி, யானை என்று கண்ணில் தென்பட்டவற்றை எல்லாம் குருவாகச் சொல்கிறார். உன்னுடைய குருவை நீயாகவும் இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.