- மதமாற்றம் இப்போது தேசிய பிரச்னையாகிவிட்டதே..? சி.அஜித்ராஜ், அரியலூர்.
ஞானகுரு :
நதியானது மலை மீது பிறந்தாலும் எந்தப் பாதையில் சுற்றித்திரிந்தாலும் இறுதியில் கடலைத்தான் அடைகிறது. அப்படித்தான் அனைத்து மதங்களும் கடவுளைத்தான் தேடிக்கொண்டே இருக்கின்றன. நீ எந்த வீட்டில் பிறக்கிறாயோ அந்த மதத்தை உன்னுடையதாக நினைக்கிறாய். அந்த மதத்தில் மட்டும்தான் கடவுள் இருப்பதாக நம்புகிறாய். அந்த நம்பிக்கை உன் வரையிலும் இருப்பதில் தவறு இல்லை. என் மதம் உயர்ந்தது என்று கொடி பிடிக்கும்போதுதான், ரத்தப்பலி கேட்கிறது மதம். கடவுளை ஒரு தனிப்பட்ட மதத்திற்குள் கட்டிப்போட முடியாது என்பதை புரிந்துகொள். ஒரு மதத்தில் இல்லாத கடவுளை வேறு மதத்தில் எப்படி கண்டுபிடிக்க முடியும்? உனக்குள் இருக்கும் கடவுளையே உன்னால் காணமுடியாதபோது வேறு எங்கு தேடினாலும் அவர் கிடைக்க மாட்டார். அதனால் மத விளையாட்டிற்குள் இறங்கி விடாதே… திரும்ப மாட்டாய்.