- புதிய தொழில் தொடங்க முதலில் என்ன செய்யவேண்டும்? வி.வினிதா, என்.ஜி.ஓ. காலனி.
ஞானகுரு :
ஞானக்கண் கொண்டு எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும். புதிய தொழிலுக்குத் தேவை இருக்கிறதா… எதிர்காலத்திலும் வளர்ச்சி இருக்குமா… இப்போது தொழில் செய்பவர்களிடமிருந்து நீ எப்படி மாறுபடப் போகிறாய் என்பதில் தெளிவாக இரு. அடுத்த பத்தாவது ஆண்டில் நீ இருக்கவேண்டிய கட்டத்தை அடைவதற்கான செயல்திட்டங்கள் தயாராக இருந்தால் மட்டும் இறங்கு. ஒன்றிரண்டு ஆண்டுகள் தாக்குப்பிடித்தால் போதும் என்று இறங்கினால் முதலுக்கே மோசமாகிவிடும்.