- சாதிக்க தடையாக இருப்பது எது? கே.காதர் பாட்ஷா, பாரபட்டித் தெரு.
ஞானகுரு :
தன்னிடம் அற்புதமான திறமை இருக்கிறது என்று உலகில் உள்ள அத்தனை மனிதர்களுமே நினைக்கிறார்கள். ஆனால் அந்தத் திறமையை வெளிக்காட்டத் தயங்குபவர்களே அதிகம். சாதனை புரிந்த அத்தனை மனிதர்களையும் புரட்டிப்பார். அவர்கள் முதலில் தன்னை வென்றிருப்பார்கள். தோற்றவனுக்கு தடைக்கல்லாக இருப்பது அவன் மட்டுமே.