- சாதிகள் எப்போது மறையும்? எம்.கோகிலா, முத்தலாபுரம்.
ஞானகுரு :
மனிதன் உருவாக்கிய கூண்டுக்குள் மனிதனே சிக்கியிருக்கிறான். கலப்பு மணம், பொருளாதார சீர்திருத்தம் காரணமாக சாதி முழுமையாக அழிந்துபோகாது என்றாலும்… மனிதன் உருவாக்கியது என்பதால் நிச்சயம் என்றாவது அழிந்துதான் போகும். ஆனால் அப்போது சாதியைப் போன்று வேறு ஒரு பிரிவினை வந்து சேரும். ஏனென்றால் இந்த உலகில் அத்தனை மனிதனும் ஒரே மாதிரியான திறமைசாலி இல்லை. தான் உயர்ந்தவன் என்பதை நிரூபிக்க ஒவ்வொரு மனிதனும் போராடிக்கொண்டே இருப்பான். வெற்றி பெறுபவன் மேல் பக்கத்திலும் தோல்வி அடைந்தவன் கீழேயும் இருப்பான். இந்தப் பிரிவினைகள் என்றென்றும் ஓயாது… ஒழியாது.