- கல்வி கற்பது எதற்கெல்லாம் பயன்படுகிறது? எஸ்.வின்சென்ட், வ.உ.சி. நகர்.
ஞானகுரு :
தினமும் உண்பது உடலுக்காக. தினமும் கற்பது மனதுக்காக. கல்வி என்பது பாடசாலையில் மட்டும் கிடைப்பது அல்ல. மரணத்தின் விளிம்பு வரையிலும் கற்றுக்கொண்டே இரு. புதுப்புது அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். புத்தகங்களில் மட்டும்தான் கற்க வேண்டும் என்பதில்லை, சக மனிதரிடம் இருந்தும் கற்றுக்கொள்.