- உறவுகளில் விரிசல் ஏற்படுவது எதனால்..? எஸ்.சதீஸ், ஆத்துமேடு
ஞானகுரு :
பிச்சைக்காரனுக்கு தினமும் நீ இரண்டு ரூபாய் போட்டுவா. ஆரம்பத்தில் உன்னை வள்ளல் என்று பாராட்டுவான். அதன்பிறகு தினமும் இரண்டு ரூபாய்தானா என்று சலிப்படைவான். ஒருகட்டத்தில், ‘இரண்டு ரூபாய்க்கு மேல் போடாத பிச்சைக்காரன்’ என்று உன்னையே திட்டுவான். இதற்குக் காரணம் உன் மீதான அதீத எதிர்பார்ப்பு. இந்த உலகில் எவருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவது அத்தனை எளிது அல்ல. எதிர்பார்ப்புகள் இருக்கும்போது ஏமாற்றமும் நிச்சயம் இருக்கும். அந்த ஏமாற்றம்தான் விரிசலுக்கு அடிப்படை. உறவையும் நட்பாக எண்ணிப்பழகு. எவரையும் பிரியாத வரம் கிடைக்கும்.