- ஆத்திகம் சிறந்ததா… நாத்திகம் சிறந்ததா?
- க.கவிதா, ரோசல்பட்டி.
ஞானகுரு :
நல்ல மனிதனாக வாழ ஆசைப்பட்டால் நாத்திகம் போதும். மனிதனைத் தாண்டிய நிலைக்கும் செல்ல ஆசைப்பட்டால் ஆத்திகத்தின் பாதையில் போகலாம்.
இன்னொரு வகையில் சொல்வது என்றால் ஆத்திகமும் நாத்திகமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தனக்கு தாங்கமுடியாத துன்பமும் சோதனையும் வரும்போது, கடவுள் இருக்கிறாரா என்று ஆத்திகன் சந்தேகப்படுகிறான். அதே துன்பம் வரும்போது, கடவுள் கொடுத்த தண்டனையோ என்று நாத்திகன் சந்தேகிக்கிறான்.
எல்லாம் இறைவன் செயல் என்கிறான் ஆத்திகன். எல்லாம் இயற்கை செயல் என்கிறான் நாத்திகன். இயற்கையையும் இறைவனையும் எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை யோசித்துப் பார்த்தால் இருவரும் ஒரே நேர்க்கோட்டில் நிற்பது புரியும்.