- கேள்வி : உலகிலேயே சிறந்த உறவு எது? வி.முனியசாமி, பரமக்குடி
ஞானகுரு :
தாய்மை, நட்பு, காதல் போன்ற உறவுகள் மனிதர்களுக்கு இடையிலானது. ஏதாவது ஒரு வகையில் ஆதாயம் கொண்டது. கண்ணுக்கே தெரியாத கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவுதான் அற்புதமானது. கடவுள் இருக்கிறானா என்று தெரியாது, வேண்டுகோள் கேட்குமா என்று தெரியாது, காப்பாற்றுவானா என்று தெரியாது. ஆனாலும் நம்பிக்கையுடன் உறவு கொள்கிறான். நன்மை, தீமை எதுநடந்தாலும் அவன் கொடுத்தது என்று சமாதானமாகிறான். இந்த உறவுக்கு இணையாக எதைச் சொல்லமுடியும்.