1. கேள்வி :  பெண்ணை நம்பலாமா… எதுவரை?  எஸ்.கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஞானகுரு :

’ஆலகால விடத்தையும் நம்பலாம்

ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம்

கோலமா மதயானையை நம்பலாம்

கொல்லும் வேங்கைப்புலியையும் நம்பலாம்

காலனார் விடு தூதரை நம்பலாம்

கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்

சேலை கட்டிய மாதரை நம்பினால்

தெருவில் நின்று தியங்கித்தவிப்பரே’ – என்று நமது பழந்தமிழ் இலக்கியமான விவேகசிந்தாமணி கூறுகிறது. இந்த ஆணாதிக்கப் பாடலை இன்னமும் தீயில் போடாமல் வைத்திருக்கும் தமிழர்களை எண்ணி நகைக்கத்தான் வேண்டியிருக்கிறது. சந்தேகம் என்ற முகமூடியை கழற்றி எறிந்துவிட்டு… பெண்ணை நம்பிப்பார், கைவிடப்பட மாட்டாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *