- கேள்வி : மூலாதாரக் குண்டலினி சக்தியை தானாக மேலெழும்பச் செய்தால் புருவமத்தியில் ஞானக்கண் திறக்கும் என்பது உண்மையா?ஜெ.ராஜேந்திரன், பேரையூர்.
ஞானகுரு :
கார்ப்பரேட் சாமியார்கள் இப்படித்தான் கப்ஸா வலை விரிப்பார்கள். மூன்றாம் நிலை தியானத்தில் அரை அடி உயரத்துக்கு உடல் தானாகவே எழும்பும் என்பார்கள். இயற்கைக்கு மாறாக எதுவும் நடக்காது. தினமும் அரை மணி நேரம் கண்களை மூடிக்கொண்டு உன்னை சுற்றி நடப்பவைகளைக் கவனி. கண்களைத் திறக்காமலே சுற்றிநடக்கும் செயல்களை பார்க்கத் தொடங்குவதுதான் நெற்றிக்கண் திறப்பு.