- கேள்வி : கனவில் கிடைக்கும் ராஜவாழ்க்கை நிஜத்தில் சாத்தியமாகுமா?எம்.முத்தையன், வத்திராயிருப்பு.
ஞானகுரு :
நிஜமாக வாழ்ந்த எந்த அரசனும் நிம்மதியாக வாழ்ந்தது இல்லை என்ற உண்மை தெரியுமா? வாழ்நாள் முழுவதும் பதவி பயம், எதிரி பயம், துரோகி பயம், உறவு பயம், மரண பயம் என்று விதவிதமான பயங்கள் அவர்களை விரட்டிக்கொண்டே இருந்தன. பெற்ற தாயையும் கட்டிய மனைவியையும் சந்தேகிக்க வேண்டும். நிம்மதியாக தினம் ஒரே அறையில் தூங்கமுடியாது. இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் விரும்புகிறாயா? உனக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையை மனநிறைவுடன் ஏற்பதுதான் ராஜவாழ்க்கை.