- பிறப்பு, இறப்பு ஏன்? எம்.பவுன்தாய், அரண்மனை புதூர்.
ஞானகுரு :
ஒவ்வொரு நபரும் தினமும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. பிறந்த அனைத்தும் இறந்துதான் ஆகவேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி. எந்த ஒரு கணத்திலும் மரணம் தொட்டுவிடும் என்ற நிலையாமையைப் புரிந்துகொள்வதே வாழ்வு.
விருந்தினராக ஒரு வீட்டுக்குச் செல்லும்போது மனம் நிறைய சந்தோஷங்கள் இருக்கும். அந்த வீட்டினருடன் சந்தோஷமாகப் பேசி, கிளம்பும்வரையிலும் அந்த ஆனந்தம் நிலைத்திருக்க விரும்புவீர்கள். அப்படித்தான் இந்தப் பூமிக்கு விருந்தினராக வந்திருக்கும் மனிதனும் நடந்துகொள்ள வேண்டும். பிறருக்குத் துன்பம் தரும் வகையில் வாழ்க்கை நடத்தக்கூடாது. பிறப்பு, இறப்பைப் போலவே இன்பமும் துன்பமும் நிலையானது இல்லை என்பதைப் புரிந்துகொண்டால், இனியெல்லாம் சுகமே.