- பணம் சேர்ந்ததுமே ஆணவம் வந்துவிடுகிறதே?எம்.சண்முகம், சூலக்கரைமேடு
ஞானகுரு :
பணம் இருப்பவனை ஆணவக்காரன் என்று பணம் இல்லாதவன் மட்டுமே சொல்கிறான். எல்லா மனிதர்களுமே பணத்தையே தேடுகிறார்கள். நிறைய பணம் இருந்தால் வாழ்க்கை சுலபமாகவும் சுகமாகவும் இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு குடை இருந்தால் புயல் மழையை ஜெயிக்கலாம் என்பது போன்ற அசட்டுத்தனமே பணம் இருந்தால் வாழ்வை ஜெயிக்கமுடியும் என்று நம்புவதும். பணக்காரன் எப்படியிருக்கிறான் என்று கணிப்பது உனக்கு தேவையில்லாத வேலை.