- நாம் வாழ்வதற்குக் காரணம் காதலா, காமமா? சி.தர்மராஜன், சாத்தூர்.
ஞானகுரு :
மற்ற உயிரினங்களிடம் இருந்து மனிதன் எந்த வகையிலும் மாறுபட்டவன் இல்லை. உண்ணுதல், தன்னை பாதுகாத்துக்கொள்தல், இனப்பெருக்கம் செய்தல் என்ற மூன்றுதான் உயிர்களின் அடிப்படை நோக்கம். காதலும் காமமும் இல்லாமலும் இந்த வாழ்க்கை இருக்கத்தான் செய்யும் என்பதை அறிந்துகொள். காதலிலும் காமத்திலும் வாழ்க்கையைத் தேடாதே, தொலைந்துபோவாய்.