- நாம் ஏன் ஒரு தலைமையை எதிர்நோக்குகிறோம்? எம்.முத்துமாரியப்பன், ஆர்.ஆர்.நகர்.
ஞானகுரு :
புதிய பாதை உருவாக்குவதைவிட பிறர் போட்ட பாதையில் செல்ல விரும்புபவர்கள் அதிகம். ஏனென்றால் ஆபத்து குறைவு. அதனால் பழைய வழியில் தொந்தரவு இல்லாமல் சிரமம் இல்லாமல் செல்ல நினைப்பவர்களே தலைமையைத் தேடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தலைவனாக இருப்பதே சிறப்பு. வெற்றி பெற்ற மனிதர்கள் அத்தனை பேரும் தலைவர்களாக உருமாறியவர்களே தவிர, தலைமையின் பின் சென்றவர்கள் இல்லை.