- நான் செய்த பாவம் தீர என்ன செய்யவேண்டும்? ஜெ.காளிராஜன், பாண்டியன்நகர்.
ஞானகுரு :
தெரிந்து செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடையாது. தெரியாமல் செய்தது பாவம் உன் கணக்கில் சேராது. எத்தனை புண்ணிய நீர் நிலைகளில் நீராடினாலும், தானம் கொடுத்தாலும் செய்த பாவத்தை தொலைக்க முடியாது. பாவத்தின் தண்டனையை ஏற்றுக்கொள். அதுதான் நீ தப்பிக்கும் எளிமையான ஒரே வழி.