- தூக்கத்தில் பயங்கர கனவு வருவது ஏன்? கே.பிரபா, திண்டுக்கல்.
ஞானகுரு :
பயம் மனிதனுக்குப் பிடிக்கும். அதுவும் பாதுகாப்பான முறையில் பயப்படுவது ரொம்பவும் பிடிக்கும். அதனால்தான் ராட்டினங்களில் பயந்துகொண்டே சந்தோஷமாக சுற்றுகிறான். கதவை மூடிக்கொண்டு பேய்ப் படங்களை பயத்துடனும் சந்தோஷத்துடனும் பார்க்கிறான். இந்த உண்மை புரிந்துதான் மனமும் மனிதனை பயமுறுத்துகிறது.
பயங்கர கனவு வருவதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை என்பதால் அந்த அனுபவத்தையும் சந்தோஷமாகவே எடுத்துக்கொள். அந்தக் கனவுகளை டைரியில் குறித்துவை. அனைவரிடமும் பகிர்ந்துகொள். நாளை என்ன கனவு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திரு. வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டால் அதைவிட மகிழ்ச்சி.