- ஒரு பணக்காரன், ஒரு ஏழை, ஒரு ஆன்மிகவாதி என மூவரும் இறைவனை வணங்கினால் யாருடைய குரலுக்கு இறைவன் முதலில் செவிசாய்ப்பான்?டி.பிச்சை, மணிநகரம்.
ஞானகுரு :
உன் வீட்டு வாசலில் ஆயிரக்கணக்கான எறும்புகள் சாரைசாரையாக போவதைப் பார்த்திருப்பாய். அதில் ஏதாவது ஓர் எறும்பு உன்னிடம், ‘மனிதா… மனிதா என்னை மிதித்துவிடாதே… முடிந்தால் எனக்கு நிறைய உணவு கொடு’ என்று எத்தனி சத்தமாக முறையிட்டாலும் உனக்கு காது கேட்குமா? இறைவனும் அப்படித்தான். மனிதன் குரலுக்கு அவன் எப்போதும் மயங்குவதில்லை.