- மனதிற்கு ஆறுதல் தருவது பாடலா, இசையா? பி.சகுந்தலாதேவி, தேனி
ஞானகுரு :
பாடலைவிட இசையே மனதிற்கு உகந்தது, உயர்ந்தது. வண்டுகளின் ரீங்காரம், தென்னையோலைகளின் சலசலப்பு, குயிலின் குரல், அருவியின் பேரிரைச்சல், கடலின் ஆர்ப்பரிப்பு போன்றவைகளை ரசிப்பதற்கு மொழி தேவையில்லை. நன்கு கட்டமைக்கப்பட்ட இசை எந்த மொழியில் இருந்தாலும் உன்னால் ரசிக்கமுடியும். இசையின் அலங்காரமே பாடல். மௌனத்தைவிட சிறந்த இசை இந்த உலகில் எதுவும் இல்லை என்பதையும் தெரிந்துகொள். அதனால்தான் மன அமைதி விரும்புபவர்கள் தனிமையைத் தேடி ஓடுகிறார்கள்.