- பெண்ணுக்கு அழகு புன்னகையா, பொன்னகையா? எம்.விண்ணரசி, பரமக்குடி
ஞானகுரு :
தனக்கு எது அழகு என்பதை அந்தப் பெண்தான் தீர்மானிக்க வேண்டும். எவராலும் எப்போதும் திருடமுடியாத ஒன்றுதான் அவளுக்கு அழகு சேர்ப்பதாக இருக்கமுடியும். பொன் என்பது சாதாரண உலோகம். மிகவும் குறைவாகவும் அரிதாகவும் இருப்பதாலே பொன்னுக்கு இத்தனை மரியாதை. தங்கம் எக்கச்சக்கமாக கிடைத்து, இரும்பு மிகவும் குறைவாக கிடைத்தால் மனிதர்கள் இரும்புச் சங்கிலியைத்தான் பெருமையாக போட்டுக்கொண்டு திரிவார்கள்.