- தாய் ஒரு …. ? கே.மணிபாரதி, திருச்சி.
இறைவனை அடைவதற்கு வழிகாட்டும் வேதங்கள்கூட, ‘மாத்ருதேவோ பவ, பித்ருதேவோ பவ’ என்று தாய், தந்தைக்குத்தான் முதல் வணக்கம் சொல்கிறது. தாயை சக்தியாகவும் தந்தையை சிவனாகவும் வணங்கச் சொல்கிறது மதம்.
உன்னை உடலும் உயிருமாக இந்த உலகிற்கு அழைத்துவந்தது பெற்றோர்தான். இதில் தாயின் பங்கு தந்தையைவிட அதிகம். தாயைப் போன்று பொறுமை காப்பதால் பூமியை பூமாதா என்றும் அள்ளியள்ளிக் கொடுப்பதால் பசுவை கோமாதா என்றும் அழைக்கிறோம். அதனால் தாய் ஒரு தேவதை என்பதில் ஐயமேயில்லை.
தாயின் மதிப்பைத் தெரிந்துகொள்ள ஒரு எளிய வழி. வெற்றிபெற்ற மனிதராக நீ நினைப்பவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்பார். அவர்கள் தாய்க்குத் தலை வணங்கியவர்களாகவே இருப்பார்கள்.