1. கீதை, குரான், பைபிள் மக்களுக்கு கூறும் கருத்து யாது?எஸ்.சமுத்திரக்கனி, கிழக்கு என்.ஜி.ஓ. காலனி.

ஞானகுரு :

கடவுளால் சொல்லப்பட்டவையாக கருதப்பட்டாலும் இந்தப் புனித நூல்கள் எல்லாமே மனிதர்களால் எழுதப்பட்டவையே. சாலைப் பயணத்தின் பாதுகாப்புக்கென சில விதிகள் இருப்பதுபோல், இந்த நூல்கள் மனிதனின் வாழ்க்கைப் பயணம் சிறப்படைவதற்கான வழிகளை பேசுகின்றன. சாலை விதிகளை மட்டுமல்ல புனித நூல்களையும் மதிப்பதாகச் சொல்லும் மனிதனே மீறவும் செய்கிறான். இந்த புனித நூல்கள் என்ன சொல்கின்றன என்பதை விளக்க ஒரு பஞ்சதந்திரக் கதை.

ஒரு கடையில் ஐந்து கிளிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மூன்று கிளிகளின் கழுத்தில் இருந்த விலைப்பட்டியில் ஆயிரம் ரூபாய் என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு கிளியின் விலை ஆயிரம் ரூபாயா என்று விசாரித்தபோது, முதல் கிளி கீதையை அப்படியே சொல்லும், இரண்டாவது கிளி குரான் சொல்லும், மூன்றாவது கிளி பைபிள் சொல்லும் என்றான் கடைக்காரன். நான்காவது கிளியின் கழுத்தில் பத்தாயிரம் ரூபாய் என்று விலை ஒட்டப்பட்டிருந்தது. அந்தக் கிளி கீதை, குரான், பைபிள் மூன்றையுமே ஒப்பிக்கும் என்றான். ஐந்தாவது கிளியின் கழுத்தில் ஒரு லட்சம் ரூபாய் என விலை ஒட்டப்பட்டிருந்தது.

காரணம் கேட்டபோது, இந்தக் கிளியின் திறமை என்னவென்று எங்களுக்குத் தெரியாது. ஏனென்றால் இந்தக் கிளி பேசுவதே இல்லை. ஆனால் இந்த நான்கு கிளிகளும் இந்தக் கிளியைத்தான் தங்கள் குருவாக மதிக்கின்றன என்று சொன்னான்.

இந்தக் கதை சொல்லவருவதை புரிந்துகொண்டால் நீயும் ஞானியே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *