- மனித உறவுகளால் நன்மையா, தீமையா? ம.தீபிகா, பாஞ்சாலங்குறிச்சி.
ஞானகுரு :
அனுபவத்திற்கும், வயதுக்கும் முன்பு தேவை இருந்ததால் மூத்தோர் சொல் அமிர்தம் என்றார்கள். குடும்பத்தில் மூத்த நபர்களைச் சுற்றி உறவு எனும் தோட்டம் அமைக்கப்பட்டது. ஆனால், இப்போது அனுபவத்தைவிட, பணத்துக்குத்தான் முதல் மரியாதை. பணம், செல்வாக்கு இருக்கும் நபர்களை உறவு சூழ்ந்துகொள்கிறது. மற்றவர்கள் செல்லாக்காசாகிறார்கள். நீ உறவுகளால் மதிக்கப்பட வேண்டுமென்றால், பணத்தால் சூழ்ந்திரு. அது நன்மையா தீமையா என்பது உன் வாக்கின் வலிமையில் உள்ளது.