- கேள்வி : வாழ்க்கை போர்க்களமாக உள்ளதே ஏன்..? மு.ரஞ்சித்குமார், ஓடைப்பட்டி.
ஞானகுரு :
ஆற்றங்கரை நாணலை விடவா உன் வாழ்க்கை கொடூரமாக இருக்கிறது. பகல் வெயிலில் காயவேண்டும். இரவு குளிரில் நடுங்கவேண்டும். மூழ்கடிக்கும் ஆற்று வெள்ளத்திலும் மூச்சைப்பிடித்து வாழ வேண்டும். நீரில்லாத காலத்தில் தாகத்தில் சாய்ந்துவிடக் கூடாது. ஆடு, மாடுகளில் இருந்து மனிதன் வரையிலும் எத்தனை எதிரிகள். ஆனாலும் நாணல்கள் நாணி நிற்பதில்லை. காற்றை எதிர்த்தே நிற்கின்றன. நீயும் ஓடிக்கொண்டே இரு. போர்க்களத்திலும் பூ மலரும் நாள் வரும்.