- கேள்வி : லஞ்சம் உருவாக காரணம் அரசியல்வாதிகளா அல்லது அரசு ஊழியர்களா? மா.முருகேசபாண்டியன், சந்திராபுரம்.
ஞானகுரு :
அவசியம், அவசரம், நேர்மையின்மை, செல்வாக்கு போன்றவையே லஞ்சத்தின் பிறப்பிடம். உதவித்தொகைக்கு சமர்ப்பிக்கவேண்டிய ஆதாரங்களை முன்கூட்டியே வாங்கிவைக்காமல், ‘இப்போதே வேண்டும்’என்று தேவைப்படும் நாளில் அவசரப்படுவது பொதுஜனம்தான். தொழில் ஆரம்பிப்பதற்கான விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் நேர்மையின்றி அனுமதி வாங்கத்துடிப்பதும் பொதுஜனமே. உன்னால் முடியாததை நான் சாதிக்கிறேன் பார் என்று செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகாரிகளை வளைப்பதும் பொதுஜனமே. சுயநலத்துக்காக பொதுஜனம் வளர்த்த செடிதான் இன்று விஷவிருட்சமாக வளர்ந்து நிற்கிறது. தன் தேவைக்கு லஞ்சத்தை பயன்படுத்தவும் மற்ற நேரங்களில் லஞ்சத்தை வெறுக்கவும் செய்யும் மனிதன் இருக்கும்வரை லஞ்ச மரம் வளர்ந்துகொண்டுதான் இருக்கும்.