- கேள்வி : ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் கதைகளா அல்லது நிஜமா? டி.மயில், ராமேஸ்வரம்.
ஞானகுரு :
நிழல் நிஜமாவதும், நிஜம் நிழலாவதும் நிஜமே. நிலவு தேய்வதும் மறைவதும் கண்ணுக்குத் தெரிகிறது என்றாலும் அது நிஜமா? கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் கடல் தெரிந்தாலும் அதன் அடியில் இருப்பது நிலம்தானே. நிஜமென நினைத்தால் இதிகாசத்தை வழிகாட்டியாகப் பார். பொய்யென நினைத்தால் அதன் கற்பனை வளத்தில் மூழ்கிப்பார்.