- கேள்வி : பெண் ஏன் போற்றப்படுகிறாள்? எஸ்.பாண்டியன், ராஜாஜி நகர்.
ஞானகுரு :
பெண்ணை புரிந்துகொள்ள முடியாத காரணத்தால் அவளை போற்றுகிறான் ஆண். ஏன் சிரிக்கிறாள், எதற்காக வருந்துகிறாள், என்ன யோசிக்கிறாள், எப்படி செயல்படுவாள் என்று ஆண் வரையும் எந்த வட்டத்துக்குள் பெண் சிக்குவதே இல்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் பெண் என்ன முடிவு எடுப்பாள் என்று எந்த ஆண் மகனாலும் சிந்திக்கவே முடியாது. உண்மையைச் சொல்வது என்றால் பெண்ணுக்கும் அது தெரியாது.