- கேள்வி : சினிமா கலைஞர்கள்கூட பல மொழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நாட்டை நிர்வகிக்கும் அரசியல் தலைவர்கள் நிறைய மொழிகளை கற்றுக்கொள்வதில்லை. இது சரிதானா? கார்த்திக், சிவகாசி
மக்களை தன்னுடைய குழந்தைகளாகவும் நினைப்பவனே நல்ல அரசியல்வாதி. பிள்ளை பசியோடு இருப்பதை முகத்தைப் பார்த்தே தாய் கண்டுபிடித்து விடுவாள். அதுபோல் மக்களுக்கான தேவைகளை சொல்லாமலே செய்துகொடுப்பவனே நல்ல தலைவன். நல்ல நிர்வாகத்துக்கு மொழியும் எழுத்தும் அவசியமேயில்லை.