- கேள்வி : சத்தியமாகவும் நேர்மையாகவும் இன்றைய உலகில் வாழமுடியுமா? கே.சிந்து, தாரமங்கலம்.
ஞானகுரு :
கானகத்தில் உயிர் குடிக்கும் சிங்கம், புலி, சிறுத்தை, முதலை, வல்லூறு போன்ற உயிரினங்கள் தினம்தினம் வேட்டையாடிக்கொண்டு இருந்தாலும் குயில் கூவுவதும் மான்கள் துள்ளி விளையாடுவதும் நடக்கத்தானே செய்கிறது. முடியுமா என்று சந்தேகப்படுவனுக்கு எதுவுமே செய்யமுடியாது. முடியும் என முடிவெடுப்பவனுக்கு எல்லாமே முடியும்.