- கேள்வி : கூட்டு வாழ்க்கை ஏன் காணாமல் போனது? கே.சந்திரா, பாண்டியன் நகர்.
ஞானகுரு :
பயம் மனிதனை ஒன்று சேர்த்தது. காட்டு விலங்குகளுக்குப் பயந்து ஒரே இடத்தில் வசித்தான். போட்டி மனிதர்களிடம் இருந்த பயத்தினால் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தான். இன்றைய சமுதாயத்தில், சக மனிதர்களே எதிரியாகிப் போனார்கள். அதனால், தான், தன் சுகம் என்று தனி மனிதனாகப் பிரிந்து வாழ்கிறான். பறவை, விலங்கு போல் இனி மனிதனும் தனித்தனியே திரிவான். எதிரிகள் அதிகரிக்கும்போதுதான், கூட்டத்தின் மகிமை அறிந்து சேர்வான்.