- கேள்வி : குழந்தைகளைக் கண்டதும் மனம் ஆறுதலடைவது ஏன்? ராஜசியாமளா, உளுந்தூர்பேட்டை.
ஞானகுரு :
உன் மலரும் நினைவுகளே காரணம். உன் கடந்த காலத்தை நினைத்து ஆறுதல் அடைகிறாய். அதேநேரம், குழந்தைகள் என்று பாராமல் கொல்லும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால், ஆறுதல் என்பது உன் மனம் தொடர்பானது. இன்று ஆறுதலாகத் தெரியும் அதே குழந்தைகள், உனக்கு நெருக்கடியான நேரத்தில் பிரச்னையாகவும் தெரியும்.