- கேள்வி : காதல் செய்வதற்கான முதல் தகுதி என்ன? என்.போஸ், பாடனூர்.
ஞானகுரு :
உன்னை உனக்குப் பிடிக்கவேண்டும் என்பதுதான் முதல் தகுதி. உன் ஆரோக்கியம், உன் அழகு, உன் சிந்தனை, உன் பேச்சு, உன் ஆசை, உன் நடவடிக்கை எல்லாமே உனக்குப் பிடித்திருக்க வேண்டும். உன்னை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சியும் பயிற்சியும் உள்ளவனாக இருத்தல் வேண்டும். தன்னை நேசிக்கத் தெரிந்தவனால்தான் பிறரை நேசிக்க முடியும். உன்னை நீ நேசிக்கத் தொடங்கிவிட்டால் பிறரும் உன்னை நேசிப்பார்கள். அதேபோன்று உன்னை மட்டுமல்ல, உன்னை நம்பி வருபவருக்கும் வயிற்றுக்கு உணவளிக்கும் வகையில் சம்பாதிக்கும் தகுதியும் இருத்தல் வேண்டும்.