- கேள்வி : அன்றைய குழந்தை வளர்ப்புக்கும் இன்றைய குழந்தை வளர்ப்புக்கும் என்ன வித்தியாசம்? பி.ரம்யா, அழகாபுரி.
ஞானகுரு :
அன்றைய குழந்தைகள் ரோட்டில் திரிந்தார்கள். சகோதர, சகோதரிகளுடன் போட்டியிட்டு வளர்ந்தார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு அல்லாடினார்கள். நோய்களை எதிர்த்துப் போராடினார்கள். சிகரெட் அட்டைகூட பேரானந்தம் தந்தது. பட்டாம்பூச்சியாக பறந்தார்கள்.
இன்று தொட்டிச் செடியாக வளர்கிறார்கள். ஏமாற்றமும் தோல்வியும் தெரியாது. ஆடம்பரப் பொருட்களுக்கு ஆசைப்படுகிறார்கள். நோய்களை ஏற்றுக்கொள்கிறார்கள். விமானப் பயணம்கூட ஆனந்தம் தருவதில்லை. சர்க்கஸ் கூடாரத்து சிங்கம் போன்று கம்பிக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள்.