- கேள்வி : வாதம், விவாதம் எது நல்லது? எஸ்.சங்கீதா, லட்சுமிபுரம்
ஞானகுரு :
கடவுள் சொன்ன கருத்தாகவே இருந்தாலும், அதனை வாதம் மூலம் நிரூபிக்க முயல்வதும் விவாதம் செய்து ஆராய நினைப்பதும் வீண் முயற்சிகளே. எந்த ஒரு சிந்தனை என்றாலும் அதனை உன் மனதுக்குள் பதியம்போடு, மீண்டும் மீண்டும் அதன் உள்ளே போ… உண்மைத் தன்மையை அறிவது மட்டுமே வாதத்தையும் விவாதத்தையும் காட்டிலும் உயர்வானது.