1. கேள்வி :யாருக்கெல்லாம் உதவி செய்யலாம்? கே.வீரபாணி, ஆர்.வி.ஆர்.நகர், பாண்டிச்சேரி.

ஞானகுரு :

பெண்ணின் உதவியால் பூமிக்கு வந்தாய். ஆணின் உதவியால் உடல் வளர்த்தாய். உன் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் பலரது உதவி இருக்கிறது. அதனால் நீயும் பிறருக்கு உதவத்தான் வேண்டும். யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறது என்று கேட்டுக்கொண்டிராதே… எத்தனை பேருக்கு உதவ முடியுமோ அத்தனை பேருக்கும் உதவு. நல்லவன், கெட்டவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பாகுபாடு பார்த்து மழை பொழிவதில்லை. எந்த நேரமும் மரணம் உன்னைத் தொட்டுவிடலாம், எனவே கொடுத்துப் பழகு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *