- கேள்வி : நிலப்பரப்பெல்லாம் சாலைகளாகவும், வீடுகளாகவும் மாற்றம் அடைவது அவசியம்தானா? எஸ்.வனிதா, பட்டுக்கோட்டை
ஞானகுரு :
தேவை, தேவை இல்லை என்பதை எல்லாம் தாண்டி மாற்றம் ஒன்றே மாறாதது. இது அதுவாகவும், அது இதுவாகவும் மாறிக்கொண்டுதான் இருக்கும். உன்னுடைய விருப்பத்தையோ, அவசியத்தையோ இயற்கை லட்சியப்படுத்துவதில்லை. நகரங்கள் கடலுக்குள் மூழ்குவதும், மலைகள் வெடித்து சிதறுவதும் இயற்கையின் சாதாராண நிகழ்வுகளே. புலி வயிற்றுக்காக மானை வேட்டையாடுவது போன்று மனிதன் இயற்கையை வேட்டியாடுகிறான். நாளையே இயற்கை மனிதனை வேட்டையாடலாம். நீ வேடிக்கை பார்த்துக்கொண்டிரு.